×

தொழில் வாய்ப்பு இல்லாததால் ஊரை விட்டு வௌியேறும் ஒவேலி பேரூராட்சி மக்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஒவேலியில், யானை தாக்கி கடந்த 10 ஆண்டுகளில் கிட்ட தட்ட 18 பேர் உயிரிழந்தனர். மனிதர்களை வனவிலங்குகள் தாக்குவது தொடர்ந்து இருக்க மறுபுறம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட அரசு வேலை வழங்கவில்லை என்கின்றனர் ஓவேலி மக்கள். பச்சை பசேல் என அழகு பொதிந்த மலைகளுக்கு உள்ளே உள்ளது கூடலூர் மாவட்டம் பழங்குடியினர் மலையாள மக்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றாக வசிக்கும் இங்கு முதல் பேரூராட்சியாக தொடைக்கப்பட்டது தான் ஓவேலி, முக்குறதி தேசிய பூங்காவில் இருந்து உருவாகும் அருவி முதலாவதாக மனிதர்கள் வாழும் பகுதியாக உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருநகரமாக திகழ்ந்த இந்த ஓவேலி, தற்போது பராமரிப்பு இன்றி அடர்ந்த மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக காட்சியளிக்கிறது. இறை தேடி அலையும் வனவிலங்குகளுக்கு கூடாரமாகவும் ஓவேலி பகுதி உருவெடுத்துள்ளது, அங்கு இருந்த 4 தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால். அங்கு வசித்த மக்களும் வாழ்வாதாரத்திற்கு வெளியூர்களுக்கு புலம் பெய்துள்ளனர். எஞ்சியுள்ள மக்கள் அங்கேயே தொழில் பொரிந்த நிலையில், உணவு தேடி ஊருக்குள் நுழையும் யானைகள் தாக்கி உயிரிழந்தனர்.

இதுவரை அங்கு 18 பேர் உயிாிழந்திருப்பதால் அரசு சார்பில் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், உறுதி அளித்த அரசு வேலை கிடைக்க வில்லை என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் யானை தாக்கி உயிாிழப்பு ஏற்படும் போது மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கூடலூர் பகுதில் யானை தாக்கி இறந்தவர்கள் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 500 பேருக்கு மேலாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என அங்கு தெரிவிக்கும் மக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு யானை தாக்கி உயிர் இழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.        


Tags : Oveli , People of Oweli municipality leave the town due to lack of employment opportunities
× RELATED ஓவேலி பேரூராட்சியில் சாலையை சீரமைக்க கோரிக்கை